Breaking News

தேர்தல் நடைமுறை குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது

வேலூர், ஏப்.15-
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடைமுறை குறித்து தேர்தல் செலவுகள் மேற்கொள்ளப் படவேண்டிய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை, ஒவ்வொரு வேட்பாளரும் கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்து அனைத்து தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், பறக்கும் படை அதிகாரிகள், நிலைகண்காணிப்புக்குழுக்கள்,
வீடியோ கண்காணிப்புக்குழுக்கள், வீடியோ படத்தை பார்த்து கண்காணிக்கும் குழுக்கள் மற்றும் கணக்கீட்டு குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(கணக்குகள்) எஸ்.பாஸ்கரனால் அனைத்து குழுக்களுக்கு அளிக்கப்பட்டது.

No comments

Thank you for your comments