Breaking News

சொந்த கட்சி வேட்பாளரை ஊருக்குள் விடாமல் விரட்டிய திமுகவினர்

புதுக்கோட்டை, ஏப்.18-
ஆலங்குடி திமுக வேட்பாளர் சதீஷை, ஊருக்குள் நுழையவிடாமல், திமுகவினரே திருப்பிய அனுப்பியதால் அந்த தொகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக தொகுதிக்கு டாக்டர் சதீஸ் என்பவரை கட்சித் தலைமை அறிவித்தது.

அதே சமயம் ஆலங்குடியை அடுத்த மறமடக்கி பகுதியைச் சேர்ந்தவர்
சிவ.வீ.மெய்யநாதன். இவர், மறமடக்கி ஊராட்சித் தலைவராக திமுக சார்பில் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் தற்போது அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவராக உள்ளார்.

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட தலைமையிடம் விருப்பமனுத் தாக்கல் செய்திருந்த சிவ.வீ.மெய்யநாதன், தனக்குத்தான் திமுகவில் சீட் கிடைக்கும் என்ற எண்ணத்தில் சில மாதங்களுக்கு முன்பாகவே தொகுதியில் தேர்தல் தொடர்பான வேலையில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் வெளியான திமுகவின் வேட்பாளர் பட்டியலில் டாக்டர் சதீஸ் என்பவருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளதைக் கண்ட மெய்யநாதனுடைய ஆதரவாளர்கள் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், சதீஸ் தொகுதியி்ல் உள்ள திமுக நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை கட்சி நிர்வாகிகளுடன் லெட்சுமி நரசிம்மபுரம் ஊராட்சியில் உள்ள அணவயல் கிராமத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்திக்க சென்றுள்ளார்.

அப்போது சாலையிலேயே காரை மறித்த திமுகவினர் வேட்பாளர் வாக்கு கேட்டு ஊருக்குள் வரக்கூடாது என்று மறித்துள்ளனர். மேலும், வேட்புமனு தாக்கல் காலம் முடியும் வரை ஊருக்குள் வரக்கூடாது என்று சத்தம் போட்டுள்ளனர். இதனையடுத்து, வேட்பாளர் சதீஸ் திரும்பிச் சென்றார்.

No comments

Thank you for your comments