Breaking News

பிளஸ்டூ ரிசல்ட் மே முதல் வாரத்தில் வெளியாகும்

சென்னை, ஏப்.25-
+2 results may be announced on May first weekபிளஸ் டூ தேர்வு முடிவுகள் எப்போது என்பது குறித்து மாணவர்கள் ஆர்வமாக காத்திருக்கும் நிலையில் மே முதல் வாரத்தில் முடிவு வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.

பிளஸ்டூ தேர்வு கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1ம் தேதியுடன் முடிவடைந்தது.
இதையடுத்து விடைத்தாட்களைத் திருத்தும் பணி தொடங்கியது. அதுவும் ஏப்ரல் 23ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள டேட்டா சென்டருக்கு மதிப்பெண்களை அனுப்பும் வேலையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதன் பின்னர் மார்க் ஷீட் தயாரிக்கும் பணி தொடங்கும். எப்படியும் இந்த மாத இறுதிக்குள்ளாகவே இந்தப் பணிகள் முடிந்து விடும் என்பதால் மே முதல் வாரத்திற்குள்ளாகவே முடிவுகளை வெளியிடலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

தேர்வு முடிவு வெளியீடு எப்போது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Thank you for your comments