Breaking News

தோல்விக்கு ’சாக்கு போக்கு’ சொல்ல விரும்பவில்லை: சொல்கிறார் டோனி

மும்பை, ஏப்.25-
ஐபிஎல் தொடரில் புனே அணியின் தொடர்ச்சியான தோல்விக்கு எந்த ஒரு சாக்கு போக்கும் சொல்ல தயாராக இல்லை என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள புனே அணி 4ல் தோல்வி, 1ல் வெற்றி என 2 புள்ளிகளுடன் 7வது இடத்தில்
உள்ளது. கடைசியாக நடந்த 4 போட்டிகளிலும் தோற்றது.

நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் நல்ல இலக்கு வைத்தும் புனே அணி தோல்வியைத் தழுவியது.

இந்த தோல்வி குறித்து புனே அணியின் தலைவர் டோனி கூறுகையில், சுழற்பந்தை எளிதில் எதிர்கொள்ள முடியாது என்றே நினைத்தோம். ஆனால் அப்படி நடக்கவில்லை. அதற்குள் 5-6 சிக்சர்கள் மூலம் 30 ஓட்டங்கள் போய்விட்டது.

இது நல்ல ஓட்டங்கள் தான். கண்டிப்பாக சாக்கு போக்கு சொல்ல கூடாது. அனைவரின் மீதும் அழுத்தம் இருந்தது. தனிப்பட்ட முறையில் பொறுப்புகளை எடுத்துக் கொள்வது அவசியமானது.

மேலும், இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் பந்துவீச்சில் முன்னேற்றம் வேண்டும். முருகன் அஸ்வின் புதிய வீரர், அவர் சில விடயங்களை சிறப்பாக கையாள வேண்டும்.

பந்துவீச்சாளர்கள் ஒரு அணியில் ஒரு நிலைதன்மையில் இல்லாததையும் பார்க்க வேண்டும். நாங்கள் 10-15 ஓட்டங்களை கூடுதலாகவும் எடுத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments

Thank you for your comments