கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க தனிப்படை
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்க உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாநகர காவல் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழக அரசு திரையரங்குகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்துள்ளதாகவும், இந்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கும் திரையரங்குகள்
இதற்காக காவல் உதவி ஆணையர், வணிகவரி துறை அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் பொதுமக்கள் உடனே 044- 2345 2359 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments