சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி விடுதலை
சென்னை, ஏப்.18-
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த 2011-ம் ஆண்டு, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது அளவுக்கு அதிகமாக
சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை கடந்த 2-ந் தேதி நடைபெற்றது. இருதரப்பினரின் வாதங்களும் நிறைவு பெற்றன. ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று காலஅவகாசம் வழங்கப்பட்டு 13-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.அதை தொடர்ந்து கடந்த புதன்கிழமை இந்த வழக்கு விசாரணை நடந்தது. பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் ஆஜராகவில்லை. வழக்கை நீதிபதி சுந்தரமூர்த்தி விசாரித்தார். இறுதி விசாரணை முடிந்து விட்டதால் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று அறிவித்தார்.
விழுப்புரம் ஊழல் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரமூர்த்தி வழக்கை விசாரித்து இன்று காலை பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவர் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட எந்த தடையும் இல்லை.
No comments
Thank you for your comments