தமிழகம் வருகிறார் பிரணாப் முகர்ஜி: குன்னூர் ராணுவ கல்லூரி விழாவில் பங்கேற்பு
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று தமிழகம் வருகிறார்.
உதகை மாவட்டம் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்க உள்ளார். இதைத் தொடர்ந்து இங்கு பயிற்சி முடித்த பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகளுடனும் குடியரசுத் தலைவர் கலந்துரையாட உள்ளார்.
இதற்கு முன்னதாக, போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கான நினைவிடத்தில் பிரணாப் முகர்ஜி அஞ்சலி செலுத்துகிறார். குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி ஏடிஜிபி ஆஷிஷ் பெங்க்ரா தலைமையில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதியம் 2 மணியளவில் குன்னூர் வரும் பிரணாப் முகர்ஜி அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலை நான்கரை மணியளவில் கோவை புறப்பட்டுச்சென்று அங்கிருந்து மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு செல்கிறார்.

No comments
Thank you for your comments