ஜெய்ப்பூரில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் சிக்கல்
ஜெய்ப்பூரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநில அரசு மற்றும் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கமும் விளக்கம் அளிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் வறட்சி நிலவுவதால், ஐபிஎல் போட்டிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராஜஸ்தான் நீதிமன்றம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ராஜஸ்தான் மாநில அரசு மற்றும் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கமும் விளக்கம் அளிக்க
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் போட்டிகள் ஜெய்ப்பூரில் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மகாராஷ்டிராவில் வறட்சி நிலவுவதால் அங்கு ஐபிஎல் போட்டிகளை நடத்த மும்பை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இதையடுத்து மும்பை அணி, தனது உள்ளூர் போட்டிகளை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடத்த முன்வந்தது. ராஜஸ்தானிலும் வறட்சி நிலவுவதால், ஜெய்ப்பூரில் போட்டி நடத்த அனுமதிக்கக்கூடாது என பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments