Breaking News

ஆம்பூர் சூப்பர் நேஷன் பார்ட்டியின் நிறுவன தலைவர் ஆம்பூர் தொகுதியில் போட்டி

ஆம்பூர், ஏப்.18-
ஆம்பூர் சூப்பர் நேஷன் பார்ட்டியின் நிறுவன தலைவர் நிருபர்களுக்கு அளிக்கும் பேட்டி யின்போது பேசியதாவது;
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆம்பூர் தொகுதியில் நான்  போட்டியிடுகிறேன். அதற்கான காரணம் பல சட்டமன்ற உறுப்பினர்கள் ஆம்பூரில் வெற்றி பெற்றபின் எவ்விதமான நற்செயல்களும் மக்களுக்கு செய்யவில்லை. இம்முறை நான் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினாராக தேர்ந்தெடுத்தால்
முக்கியமான மூன்று  பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளேன். ஆம்பூர் ரெட்டி தோப்பு பெத்லேகம் வழியாக உள்ள ரயில்வே பாலத்தை கண்டிபாக மேம்பாலமாக மாற்றுவேன்.

உலக தரம் வாய்ந்த தோல் பொருட்கள் காலனிகள் ஏற்றுமதி செய்யும் ஆம்பூரில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதியும் சுகாதார வசதியும் செய்து முடிப்பேன். ஆம்பூர் அரசு சுகாதார மருத்துவமனை சுகாதாரமற்று உள்ளது இதை பொது மக்கள் பயனடையும்படி செய்வேன். தமிழக அரசு எடுத்துவரும் நல்ல திட்டங்ளில் இணைந்து செயலாற்றுவேன். கி.றி.யி அவர்களின் கூற்றுபடி தடையற்ற உயர்கல்வி, மருத்துவ வசதி, நல்ல குடிநீர், கிராமபுற மாணவர்களின் கல்வி இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயில உறுதுனையாக இருப்பது. படித்த மாணவர்களுக்கு எந்தவிதமான பாரபட்சமின்றி வேலைவாய்ப்பு தருவது. அடிப்படை தேவைகளை அறிந்து உடனுக்குடன் மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்ப்பேன்

மக்கள் அனைத்து ஜாதி, மத வேறுபாடு இல்லால் வாழ சகோதரத்துடனும் மனித நேயத்துடனும் வாழ சூப்பர் நேஷன் பார்ட்டி ஒரு பெரிய பலமாக இருக்கும். குறிப்பாக மக்களின் தேவையை கருத்தில் கொண்டு அவசிய தேவைகளை அனைத்தும் செய்வேன் என்றார்.

No comments

Thank you for your comments