Breaking News

85 வருட சா(சோ)தனையை முறியடித்த பெங்களூர் வெப்பநிலை! 39.2 டிகிரி கொளுத்தியது

பெங்களூர், ஏப்.25-
Bengaluru records highest temperature since 1931 on Sundayபெங்களூரில் 85 வருடங்களில் முதல் முறையாக, நேற்று அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

பெங்களூரில் நேற்று அதிகபட்ச வெப்ப நிலை 39.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 1931ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 38.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்ததே இதுவரை
நகரில் பதிவான உச்சபட்ச வெப்ப நிலையாக இருந்துவந்தது. அந்த சா(சோ)தனை நேற்று தகர்க்கப்பட்டுள்ளது

வெப்ப நிலை உயர்வில் இருந்து பெங்களூர்வாசிகளுக்கு இன்னும் ஒரு வாரத்திற்கு விடிவு கிடையாது என்கிறது வானிலை இலாகா. வெப்ப நிலை 38 முதல் 40 டிகிரி செல்சியசை ஒட்டியே காணப்படுமாம். வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, தோல் பிரச்சினை உள்ளிட்ட வெப்பம் தொடர்பான நோய்களுடன் சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் எண்ணிக்கை மருத்துவமனைகளில் அதிகரித்துள்ளது.

இதேபோல, வெப்பத்தின் காரணமாக, நகரில், தீ விபத்துகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாம்.

No comments

Thank you for your comments