மே. வங்கத்தில் கொல்கத்தா உட்பட 62 தொகுதிகளுக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
மேற்கு வங்க மாநிலத்தில் 62 தொகுதிகளுக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மற்றும் மேற்கு வங்கம் ஆகிய
5மாநிலங்களுக்கான, சட்டசபை தேர்தல் கடந்த மார்ச் மாதம் 4ம்தேதி தேர்தல்
அறிவிக்கப்பட்டது. அதன்படி, மேற்கு வங்கத்தில் 6கட்டமாக தேர்தல்
நடத்தப்படுகிறது.
ஏற்கனவே, இம்மாதம் 4ம் தேதி மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டத்
தேர்தல் முடிந்து விட்ட நிலையில், இன்று 62 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்டத்
தேர்தல் நடைபெற்று வருகிறது.
மூர்ஷிதாபாத், நடியா, பர்த்வான் மற்றும் கோல்கட்டாவில் உள்ள 7
தொகுதிகள் உள்பட மொத்தம் 62 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை
தொடங்கியது. இந்த 62 தொகுதிகளில் 34 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 418
பேர் போட்டியிடுகின்றனர்.
1.37 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தத் தொகுதிகளில், 16,641 வாக்குச்
சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகளுக்காக துணை ராணுவத்தினர்
75,000 பேர் உள்பட ஒரு லட்சம் பாதுகாப்புப் படை வீரர்கள்
குவிக்கப்பட்டுள்ளனர்.
No comments
Thank you for your comments