Breaking News

கேரள அரசுக்கு விஜய் மல்லையாவால் 50 கோடி இழப்பு

கேரளா, ஏப்.21-
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவால் கேரள அரசுக்கு ரூ.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

 பல்வேறு வங்கிகளில் பல ஆயிரக்கணக்கான
கோடிகளில் கடன் வாங்கிவிட்டு தற்போது அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வருகிறார் விஜய் மல்லையா.

கேரள மாநிலம் பாலக்காட்டில் இவருக்கு கேரள அரசு நிலம் ஒதுக்கியதில் அரசுக்கு 50 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் பரவியது. இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் இது தொடர்பான தகவலை பெற்றார்.

அதில் காஞ்சிக்கோடு பகுதியில் விஜய் மல்லையா பீர் தொழிற்சாலை அமைக்க 2013-ஆம் ஆண்டு ஒரு செண்ட் 70 ஆயிரம் வீதம் 20 ஏக்கர் நிலத்தை 17 கோடிக்கு வாங்கியது தெரியவந்தது.

இதன் மூலம் அரசுக்கு ரூபாய் 50 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு செண்ட் ரூ.3 லட்சம் மதிப்புள்ள அந்த நிலத்தை விஜய் மல்லையாவுக்கு ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை செய்தது ஏன் என்ற கேள்வி எழும்பியுள்ளது.

மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியாமல் இந்த நிலம் விற்பனை நடந்திருப்பதாகவும், செய்திகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என பாலக்காடு ஆட்சியர் மேரி குட்டி கூறியுள்ளார்.

No comments

Thank you for your comments