Breaking News

பத்திரிகை சுதந்திர தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு 133வது இடம்

இந்தியா, ஏப்.21-
சர்வதேச அளவில் 2016-ம் ஆண்டிற்கான எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு வெளியிட்ட பத்திரிகை சுதந்திர தரவரிசை பட்டியலில் 180 நாடுகளில், இந்தியா 133வது இடத்தை பிடித்துள்ளது.
 
2016 உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு, கடந்த
வருடத்தில் அரசாங்கம் மற்றும் தனியார் துறையால் இதழியல் சுதந்திரம் மீதான தீவிர தாக்குதல்களை பிரதிபலித்துள்ளது. இது ஒவ்வொரு நாட்டிலுல் உள்ள ஊடக சுதந்திர நிலையை குறிப்பதாக உள்ளது.

2010-இல் இருந்து கடந்த 6 ஆண்டுகளாக பின்லாந்து தொடர்ந்து முதலிடதில் உள்ளது. இந்தியா 136வது இடத்தில் இருந்து 133வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ரஷ்யா 148-வது இடத்தில் உள்ளது.

பத்திரிகை சுதந்திர தரவரிசை பட்டியல், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள இதழியலின் தரத்தின் வெளிபாடு அல்ல 180 நாடுகளில் உள்ள ஊடகத்தின் சுதந்திரத்தின் மதிப்பீடு, சட்ட கட்டமைப்பு தரம் மற்றும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை சார்ந்தது.

No comments

Thank you for your comments