Breaking News

பி.எஸ்.எல்.வி.சி -33 ராக்கெட்: கவுன்ட் டவுன் தொடங்கியது

ஸ்ரீஹரிகோட்டா, ஏப்.27-
பி.எஸ்.எல்.வி. சி33 ராக்கெட் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி செயற்கைக்கோள் வியாழக்கிழமை பகல் 12.50 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான 51 மணி நேரம் 30 நிமிஷங்கள் கவுன்ட் டவுன் செவ்வாய்க்கிழமை காலை 9.20 மணிக்குத் தொடங்கியது.

பேரிடர் காலங்களில் கடல், வான் போக்குவரத்து பாதையைத் துல்லியமாக
கணக்கிடுவதற்காகவும், தகவல் தொழில்நுட்ப மேம்பாடு, ராணுவம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தவும் 7 வழிகாட்டி செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப 2013-ஆம் ஆண்டு இஸ்ரோ திட்டமிட்டது.

அதன்படி, 2013 ஜூலையில் தொடங்கி கடந்த மார்ச் வரை ஐ.ஆர்.என்.எஸ்.எஸ், - 1ஏ, 1பி, 1சி, 1டி, 1ஈ, 1எப் என 6 செயற்கைக்கோள்கள் ஏற்கெனவே பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். - 1ஜி என்ற 7 வது செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி. சி-33 ராக்கெட் மூலம் வியாழக்கிழமை நண்பகல் 12.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

இதற்கான 51 மணி நேரம் 30 நிமிஷங்கள் கவுன்ட் டவுன் செவ்வாய்க்கிழமை காலை 9.20 மணிக்குத் தொடங்கியது. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். - 1ஜி செயற்கைக்கோளில் அதிநவீன சோலார் பேனல்கள், பேட்டரி, சென்சார் கருவிகள், எல்5-பேண்ட் மற்றும் எஸ்-பேண்ட் உள்பட அதிநவீன மோட்டார்களும் பொருத்தப்பட்டுள்ளன. இவை செயற்கைக்கோளின் செயல்பாடுகளைத் துல்லியமாகக் கணிக்க கூடிய அளவில் பொருத்தப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments