Breaking News

1 லட்சம் மூக்குத்திகள் தயாரிப்பு?: சோதனை அதிகாரிகளை உள்ளே வைத்து பூட்டிய கடை உரிமையாளர்

கோவை, ஏப்.26-
கோவையில் நகைக்கடை ஒன்றில் நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை வரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.

கோவை பெரிய கடை வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஒரு‌ லட்சம் மூக்குத்திகள் தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து பறக்கும்
படையினர், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அந்த நகைக்கடைக்கு வந்து சோதனை மேற்கொண்டனர்.

ஆனால், இந்தச் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நகைக்கடை உரிமையாளர்கள் அதிகாரிகளை உள்ளே வைத்துப் பூட்டினர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி அதிகாரிகளை விடுவித்தனர். இந்த நிலையில் நகைக்கடை உரிமையாளர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

No comments

Thank you for your comments