Breaking News

புதுக்கோட்டை அருகே ரூ.1.61 லட்சம் பணம் பறிமுதல்: பறக்கும் படை அதிரடி

புதுக்கோட்டை, ஏப்.26-
Election authorities seized Rs 1.61 crore money in gandarvakottai புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடியே 61 லட்சத்து 50 ஆயிரம் ருபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதிக்குட்பட்ட செங்கிப்பட்டி பகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராஜ் மற்றும் கந்தர்வகோட்டை தாசில்தார் சாலை தளவாளழம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்த போது சுமார் 1 கோடியே 61 லட்சத்து 50 ஆயிரம் ருபாய் பணம் ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து அதிகாரிகள விசாரனை நடத்தியபோது இந்த பணம் திருச்சியில் இருந்து திருவாரூரில் உள்ள தனியார் வங்கிக்காக செல்லும் பணம் என்பது தெரியவந்தது. இருப்பினும் முறையான ஆவணங்கள் இல்லாததால் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் உரிய ஆவணங்கள் சர்ப்பிக்கப்பட்டால் இந்த பணம் திருப்பி ஒப்படைக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments