Breaking News

என்.ஐ.டி, ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு: 14 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

சென்னை, ஏப்ரல் 04-
Gateஎன்.ஐ.டி, ஐ.ஐ.டி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பு சேருவதற்கான ஜே.ஈ.ஈ முதன்மை தேர்வு நாடு‌முழுவதும் நடைபெற்றது.

இந்த தேர்வினை 14 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தமிழகத்தில்,
சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ‌எழுத்துத் தேர்வு நடைபெற்றது. வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் கணினி வழித்தேர்வு நடைபெறவுள்ளது.

ஜே.ஈ.ஈ தேர்வு முடிவுகள் வரும் 27ஆம் தேதி வெளியாகும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. மத்திய கல்வி நிறுவனங்களில் சேர ஜே.ஈ.ஈ தேர்வு பட்டியல் வரிசையில் முதல் ஒன்றரை லட்சத்திற்குள் இடம்பெற்றிருக்க வேண்டும்.









No comments

Thank you for your comments