Breaking News

தேர்தல் தேதியே தெரியாம மகளிரணி கூட்டத்தில் பேசிய பிரேமலதா..!

சென்னை, மார்ச் 11-
தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தேர்தல் தேதியே தெரியாமல் மாநாட்டில் பேசியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ராயப்பேட்டையில் தே.மு.தி.க. மகளிரணி கூட்டம் நடந்தது. அதில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்த தேர்தலில் நாங்கள் தனியாகத்தான் போட்டியிட போகிறோம். அனைத்து கட்சியினரும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்தனர்.

அவர்களுக்கு நான் நன்றியை கூறிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அந்த கூட்டத்தில் தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா தனது உரையை முடிக்கையில், இந்த தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களியுங்கள்.

சம்மர் வெகேசன் என்று வெளியூருக்கோ வெளிநாட்டுக்கோ சென்று விடாதீர்கள். அப்படியே சென்றாலும் உங்கள் விடுமுறை திட்டத்தை மே 19ம் தேதிக்குள் முடித்துவிடுங்கள்.

அத்தனை பேரும் வாக்களிக்க வேண்டும். அப்போது தான் கள்ள ஓட்டை தவிர்க்க முடியும் என பேசியுள்ளார்.

தமிழகத்தில் மே 16ம் தேதி தான் வாக்களிக்கும் தினம், ஆனால் மே 19ம் தேதிக்குள் விடுமுறை திட்டத்தை முடித்துவிடுங்கள் என பிரேமலதா தவறாக தேதியை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

மே 19ம் தேதி தமிழகத்தில் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments