பெண் போர் விமானிகள் 4 ஆண்டுகளுக்கு தாய்மையடைய தடை!
போர் விமானங்களை இயக்க 3 பெண் போர் விமானிகளுக்கு ஹைதரபாத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
முதல் கட்ட பயிற்சி முடிந்து 2வது கட்ட பயிற்சி கிரண் எம்.கே 2 ரக போர் விமானங்களில் பயிற்சி பெறவுள்ளனர்.
2வது கட்ட பயிற்சி முறைதான் மிக முக்கியமானது என்பதால், இந்த பயற்சி முறைக்கு தேர்வு செய்யப்பட்ட 3 பெண் விமானிகளும் நிச்சயம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயராகியிருக்க வேண்டும்.
அப்போதுதான் அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், போர் விமான பைலட்டுகளாக தேர்வு செய்யப்படும் பெண் விமானிகள் 4 ஆண்டுகளுக்கு தாய்மையடையக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் துணை ஏர் வைஸ் அட்மிரல் என்.கே. தாண்டன் கூறுகையில், போர் விமானத்தில் பைலட்டுகளாக பறக்க கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் தொடர்ச்சியான பயிற்சி தேவைப்படும்.
பெண் விமானிகளின் பயிற்சி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இது எல்லா நாட்டு விமானப்படையிலும் நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம்தான் என குறிப்பிட்டுள்ளார்.
No comments
Thank you for your comments