Breaking News

இளைஞரின் தாராள உள்ளம்: குவியும் பாராட்டுகள்

நார்வே, மார்ச் 11-
28,000 பவுண்டு பணத்தை தொண்டு நிறுவனத்திற்கு அளித்த இளைஞரின் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

நார்வே நாட்டில் ரியல் எஸ்டேட் தரகராக செயல்பட்டுவருகிறார் 27 வயதான இளைஞர் Vemund Thokildsen.

இவர் சமீபத்தில் புற்றுநோய் அறக்கட்டளை ஒன்றிடம் இருந்து குடியிருப்பு
ஒன்றை தனது நண்பர் ஒருவருக்காக வாங்கியுள்ளார்.

இந்நிலையில் அந்த வீட்டில் அமைந்திருக்கும் Fireplace பகுதியை வேறு பகுதிக்கு மாற்ற முடியுமா என இருவரும் இணைந்து ஆராய்ந்து வந்துள்ளனர்.
அப்போது அதில் பொருத்தப்பட்டிருந்த ஒரு கல்லை அப்புறப்படுத்தியபோது அதன் அடியில் ஒரு காகித உறை இருந்ததாக தெரிய வந்தது.

அந்த உறையை எடுத்து பிரித்து பார்த்த இளைஞர் Thorkildsen பெருமகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துள்ளார்.

அந்த உறையில் நார்வே நாட்டு பணம் சுமார் 28,000 பவுண்டு இருப்பது அவருக்கு தெரிய வந்தது.

புதையல் கிடைத்த மகிழ்ச்சியில் மிதந்த அவர், உடனடியாக தனது முடிவை மாற்றிக்கொண்டு, அந்த பணத்தை தொண்டு நிறுவனத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளார்.

நார்வேயில் இயங்கி வரும் புற்றுநோய் அறக்கட்டளையான Kreftforeningen என்ற தொண்டு நிறுவனத்தில் இருந்துதான் அந்த குடியிருப்பை அவர் வாங்கியிருந்தார்.

அதனால் புதையலாக கிடைத்த அந்த பணமும் அவர்களுக்கே சொந்தம் என கூறியுள்ள அந்த இளைஞர், பணத்தை அவர்களுக்கே திருப்பி வழங்கியுள்ளார்.
இளைஞரின் இந்த செயல் அங்குள்ள உள்ளூர் பத்திரிகையில் செய்தியாக வரவே, அவரது நண்பர்கள் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பாரட்டியுள்ளனர்.

No comments

Thank you for your comments