கூகுள் தானியங்கி கார் விபத்துக்குள்ளானது எப்படி? சிசிடிவி காட்சிகள் வெளியானது
கலிபோர்னியா, மார்ச் 11-
கூகுள்
நிறுவனம் சார்பில் சாரதி இன்றி தானாக இயங்கக்கூடிய கார் வடிவமைக்கப் பட்டு
கடந்த ஓராண்டுக்கும் மேலாக சோதனை ஓட்டம்
நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 23 கார்கள் சோதனை ஓட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
கலிபோர்னியா மாகாணம், மவுன்ட் ஹில் பகுதியில் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி கூகுள் கார் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது.
அப்போது சாலையோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் மீது ஏறாமல் இருக்க கார் ஒதுங்கி சென்றது.
இதில் அதே சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தின் பக்கவாட்டில் கூகுள்
கார் மோதியது. இதில் பேருந்துக்கும் காருக்கும் சிறிது சேதம் ஏற்பட்டது.
இந்த விபத்து நடந்த வீடியோ, பேருந்துக்குள் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், இந்த விபத்தில் பேருந்து மீது எந்த ஒரு தவறும் இல்லை என தெரியவந்துள்ளது.
சோதனை ஓட்டத்தின்போது கூகுள் தானியங்கி கார்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன.
கடந்த 2015 ஜூலை முதல் இதுவரை 14 விபத்துகள் நேரிட்டுள்ளன. இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தவறுகளை திருத்தி வருகிறோம், இனிமேல் விபத்துகள் நேரிடாத வகையில் கூகுள்
தானியங்கி காரின் மென்பொருள் மாற்றியமைக்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments