கடைசி நேரத்தில் விளாசிய சிக்சர்! புதிய வரலாறு படைத்த டோனி
இந்தியா, மார்ச் 2:
ஆசியக்கிண்ண
டி20 தொடரில் இந்தியா- இலங்கை அணிகள் மோதிய டி20 போட்டி நேற்று
நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9
விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் இந்தியா எளிய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கியது. இந்தியா 126
ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 19வது ஓவரில் டோனி
களமிறங்கினார்.
சிறிவர்த்தனே வீசிய அந்த ஓவரின் 3வது பந்தை சிக்சருக்கு பறக்க விட்ட
டோனி, சர்வதேச போட்டிகளில் 200 சிக்சர்கள் விளாசிய முதல் அணித்தலைவர் என்ற
சாதனையை படைத்தார்.
பின்னர் கடைசி ஓவரின் 2வது பந்தில் கோஹ்லி அசத்தலாக ஒரு பவுண்டரி விளாச
இந்தியா 5 விக்கெட்டுக்கு 142 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட்டுகளால் வெற்றி
பெற்றது.
No comments
Thank you for your comments