பேஸ்புக்கில் ”கமெண்ட்” போட்ட இளைஞர் வெட்டி கொலை
பெங்களூர், மார்ச் 2:
பெங்களூர் பேட்டஹலசூரு பகுதியை சேர்ந்த அருண்
ராவ் (24) என்பவரும், ஹுன்சேமாரனஹள்ளி பகுதியை சேர்ந்த சந்தீப் என்பவரும்
கல்லூரி தோழர்கள்.
அருண் ராவ், பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு பெட்டக நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், சில தினங்கள் முன்பு, சந்தீப்பின் பேஸ்புக் கருத்து ஒன்றின்கீழ், அருண் நண்பர் அஜித் என்பவர் கமெண்ட் அடித்துள்ளார்.
அப்போது 'ஹாய் சிஷ்யா' என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தியுள்ளார்.
பெங்களூர் பாஷை நட்பு வட்டாரத்தில் பெரிய நபராக காட்டிக்கொள்வோரை
பார்த்து 'குரு' என்று அழைப்பதும், மற்றவரை 'சிஷ்யா' என்று அழைப்பதும்
வழக்கம்.
எனவே, சிஷ்யா என்று தன்னை அழைத்ததை சந்தீப் கவுரவ குறைச்சலாக எடுத்துக்கொண்டு அஜித்தை கமெண்டில் திட்டியுள்ளார்.
ஆனால் அருண், அஜித்துக்கு ஆதரவாக கமெண்ட் போட்டததால் கோபமடைந்த சந்தீப், தனது தோழர்கள் சிலரை அனுப்பி அருணை அடித்து உதைத்துள்ளார்.
இதனால் பயந்துபோன, அருண் தாய் அமராவதி, தமிழகத்திலுள்ள தனது சகோதரி வீட்டுக்கு அருணை சில நாட்கள் அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் கடந்த மாதம் 26ம் தேதி வீடு திரும்பிய அருணை 29ம் தேதி இரவு 8.30 மணியளவில் மீண்டும் அவர்கள் இழுத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், பாகலூர் கிராஸ் பகுதியில், அருணை ரத்த வெள்ளத்தில்
கண்டுபிடித்த நண்பர்கள் அவரை அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால், அருண் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். தற்போது இதுதொடர்பாக
வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
No comments
Thank you for your comments