இந்தியாவில் மிகவும் சுத்தமான ரயில் நிலையம்: முதலிடத்தில் எந்த ரயில் நிலையம்?
டெல்லி, மார்ச் 19-
இந்தியாவில் மிகவும் சுத்தமான ரயில் நிலையம்,
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் ரயில் நிலையம் என ஐ.ஆர்.டி.சி. நடத்திய
கருத்துக்கணிப்பில்
தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி – பிப்ரவரி மாதங்களுக்கு இடையே பல்வேறு ரயில் நிலையங்களிலும் பயணிகளிடத்திலும் ஐஆர்டிசி கருத்து கேட்டது. 1.34 லட்சம் பயணிகளிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. மேலும்
தூய்மை தொடர்பான 40 அம்சங்கள் குறித்தும் அவர்களிடம் கேள்வி
எழுப்பப்பட்டன.
இந்த ஆய்வில் வருமான ரீதியாக ரயில் நிலையங்களை இரண்டாக பிரித்து, ரூ.50
கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களை ஏ-1 என பட்டியலிட்டுள்ளது. ரூ.6 கோடி முதல் வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களை ஏ பிரிவின் கீழும் பட்டியலிடப்பட்டன.
இதன் அடிப்படையில் ஏ-1 பிரிவில் இந்தியாவிலேயே மிகவும் சுத்தமானதாக குஜராத்தின் சூரத் ரயில் நிலையம் தெரிவாகியுள்ளது. இரண்டாவது இடத்தில் ராஜ்கோட் ரயில் நிலையமும், 3-வது இடத்தில் பிலாஸ்பூர் ரயில் நிலையமும் தெரிவாகியுள்ளது.
75 ரயில் நிலையங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள இப்பிரிவில் பிரதர்
மோடியின் வாரணாசி தொகுதிக்குட்பட்ட ரயில் நிலையம் 65-வது இடத்தில் உள்ளது. ஏ- பிரிவில் பஞ்சாப் மாநிலத்தின் பீஸ் ரயில் நிலையம் சுத்தமான ரயில் நிலைய பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
5-வது இடத்தில் தமிழகத்தின் கும்பகோணம் ரயில் நிலையம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments