சென்னை, மார்ச் 13-
தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உண்மையிலேயே லோக் ஆயுக்தா என்கிற ஊழல் விசாரணை ஆணையத்தை அமைக்க முன்வர மாட்டார்கள் என, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், அறப்போர் இயக்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழகத்தில் ஊழலை ஒழிக்கவும், ஊழல் செய்பவர்களை தண்டிப்பதற்கு, லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற சட்ட முன்வரைவு வெளியிடப்பட்டது. இதில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெய்ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் பூஷன், ஊழலை ஒழிக்க, அரசியல் தலையீடு இல்லாத, முழு சுதந்திரத்துடன் இயங்கும் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவது அவசியம் என கூறினார்.
No comments
Thank you for your comments