வரும் 17ம் தேதி துபாயில் அமீரக அளவிலான பேட்மிண்டன் போட்டி துவக்கம்
துபாய், மார்ச் 13-
துபாயில் வரும் 17ம் தேதி முதல் அமீரக அளவிலான பேட்மிண்டன் போட்டி தொடங்க இருக்கிறது என குட்வில் பேட்மிண்டன் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சையத் அலி தெரிவித்தார்.
இந்த போட்டிகள் வரும் மார்ச் 17, 18, 19 மற்றும் 25 ஆகிய தேதிகளில் துபாய் அல் தவார் விளையாட்டு மையத்தில் நடைபெற இருக்கிறது. துபாய் விளையாட்டு கவுன்சில் இந்த போட்டிக்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இந்த போட்டி ஒற்றையர், இரட்டையர், கலப்பு உள்ளிட்ட பல பிரிவுகளில் நடைபெறுகிறது. போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் 055 41 45 636 / 056 62 42 343 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளலாம். போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கப் பரிசும், சிறப்புக் கோப்பையும் வழங்கப்படும்.
No comments
Thank you for your comments