Breaking News

கலாபவன் மணியின் மரணத்திற்கு இதுதான் உண்மையான காரணம்!

மறைந்த பிரபல நடிகர் கலாபவன் மணியின் மரணத்திற்கு கல்லீரல் பாதிப்பே காரணம் என தெரியவந்துள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகரான கலாபவன் மணி கடந்த 6ம் தேதி உயிரிழந்தார்,  இவரது மரணத்தில் மர்மமாக இருப்பதாக கூறி சகோதரர் புகார் கூறவே போலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.

சில தினங்களுக்கு முன், அவரது உடலில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்ததாக சமீபத்தில் வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அவர் கொலை செய்யப் பட்டாரா? என்ற கோணத்தில் போலிசார் விசாரணை நடத்திய போதிலும், எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், கல்லீரல் மற்றும் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டதால் மரணம் நேர்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவரது மரணத்துக்கு உடலில் கலந்திருந்த பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் மெத்தனால் என்ற ரசாயன பொருள் காரணம் அல்ல என்றும், அவர் சாப்பிட்ட எந்தவொரு உணவுப்பொருளிலும் இவை கலக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இயற்கையான மரணம் என்பதை உறுதி செய்ய, அவரது உடல் உறுப்புகளை ஹைதராபாத்தில் உள்ள மத்திய தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு அனுப்ப போலிசார் முடிவு செய்துள்ளனர்.

No comments

Thank you for your comments