Breaking News

அழகிரி அவரது தாய்-தந்தையை சந்தித்ததாக கேள்விப்பட்டேன்: ஸ்டாலின் ஆவேசம்

சென்னை, மார்ச் 24-
திமுக தலைவர் கருணாநிதியை கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்த அழகிரி இன்று திடீரென சந்தித்து பேசியது குறித்து கருத்து தெரிவித்த, மு.க.ஸ்டாலின், அவர் தனது தந்தை-தாயை சந்தித்ததாக 'கேள்விப்பட்டேன்', அதை அரசியலாக்காதீர்கள் என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். 


கருணாநிதியை, திடீரென கோபாலபுரம் இல்லத்தில் அழகிரி இன்று சந்தித்து பேசியுள்ளார். 2014ம் ஆண்டு, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் சந்திப்பு இதுவாகும். சந்திப்பு குறித்து அழகிரி கூறுகையில், தந்தை என்ற முறையில் மரியாதை நிமித்தமாக கருணாநிதியை சந்தித்ததாக தெரிவித்தார்.
ஆனால், திமுக கூட்டணியில் தேமுதிக இணையாமல், மக்கள் நல கூட்டணியுடன் இணைந்துவிட்டதால், தென் மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்த அழகிரி தேவை என்ற நோக்கத்தில் அழகிரியை கருணாநிதி அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கலாம் எனவும், எனவே மீண்டும் அழகிரியை கட்சியில் சேர்க்கும் அறிவிப்பை திமுக தலைமை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது. 

அழகிரி கட்சியி்ல் சேர்க்கப்பட்டால், ஸ்டாலினின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்பது அவரது ஆதரவாளர்கள் கவலையாக உள்ளது. இந்நிலையில், இன்று மதியம் அறிவாலயத்திற்கு வந்த ஸ்டாலினிடம் நிருபர்கள், இதுகுறித்து கேள்வி எழுப்பினர். 

அப்போது ஸ்டாலின் கூறியாதாவது: அழகிரி தனது தாய், தந்தையை சந்திக்க வந்ததாக கேள்விப்பட்டேன். அரசியல் சந்திப்பு எதுவும் இல்லை. தேவையில்லாமல் நீங்கள் (நிருபர்கள்) இந்த விஷயத்தை வேறுமாதிரி கொண்டுபோக வேண்டாம். 

மேலும், நாளை அல்லது நாளை மறுநாள் மனிதநேய மக்கள் கட்சியுடன், திமுக தொகுதி உடன்பாடு செய்துகொள்ள உள்ளது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார். இதன்மூலம் அழகிரியை கருணாநிதி சந்தித்ததை ஸ்டாலின் விரும்பவில்லை என்பது புலப்படுகிறது. 

இந்த விஷயத்தில் கருணாநிதி- ஸ்டாலின் இடையே புதிய கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  

தொடர்கிறது குடும்ப அரசியல் சண்டை..... 
திமுக நிலைபாடு என்ன ?
வெற்றி  அழகிரிக்கா?   ஸ்டாலினுக்கா?  
காத்திருப்போம் காலம் பதில் சொல்லும்....


No comments

Thank you for your comments