குடியாத்தம் அடுத்த ராஜக்கல் பகுதியில் காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காதலி அடித்து கொலை, காதலன் கைது
குடியாத்தம், மார்ச் 11-
பேர்ணாம்பட்டை அடுத்த ராஜக்கல், திருவள்ளுவர் நகரைச்
சேர்ந்தவர் ஜோதி பிரசாத். இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை
செய்கிறார். இவரது மகள் பிரீதா (19) ஆம்பூரில் உள்ள தனியார் செவிலியர்
கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர்களின் உறவினர்,
புதுமனையைச் சேர்ந்த செல்வம். இவரது மகன்
ரஞ்சித் குமார் (24). பிரீதாவும்,
ரஞ்சித்குமாரும் காதலித்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் புதன்கிழமை இரவு ரஞ்சித்குமார், பிரீதா
வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம்
ஏற்பட்டுள்ளது. அப்போது, ரஞ்சித் குமார் துப்பட்டாவால் பிரீதாவின் கழுத்தை
இறுக்கிக் கொலை செய்துவிட்டுத் தப்பியதாகத் தெரிகிறது. இதுகுறித்து,
மேல்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். வியாழக்கிழமை
ரஞ்சித்குமாரை கைது செய்து சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

No comments
Thank you for your comments