அமெரிக்க ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்திய தலிபான்கள்?: வெளியான பரபரப்பு தகவல்கள்
அமெரிக்கா, மார்ச் 18-
ஆப்கானிஸ்தான்
நாட்டில் உள்ள மிகபெரிய Helmand மாகாணத்தில் உள்ள Shawal
Manda என்ற
பகுதியில் தான் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தலிபான் தீவிரவாதிகள்
தெரிவித்துள்ளனர்.
சற்று முன்னர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த Watan Press என்ற பத்திரிகை ஒரு புகைப்படத்துடன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் ‘அமெரிக்க நாட்டுக்கு சொந்தமான ஹெலிகொப்டரை தலிபான்கள் சுட்டு
வீழ்த்தியதாகவும், அதில் பயணித்த அனைத்து அமெரிக்க வீரர்களும்
பலியாகியுள்ளதாகவும்’ தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டரில் எத்தனை வீரர்கள் பயணம் செய்தனர் என்ற தகவல்கள் வெளியாகாத
நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக இரு நாடுகளின் அரசாங்கமும்
அதிகாரப்பூர்வமான தகவல்களை இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியாகியுள்ள உறுதிப்படுத்தாத செய்திகளின் அடிப்படையில்
ஹெலிகொப்டரில் 4 வீரர்கள் பயணித்தாகவும், அவர்கள் அனைவரும் இந்த
தாக்குதலில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments
Thank you for your comments