Breaking News

தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களில் அனுமதியின்றி கட்சி விளம்பரம் எழுதினால் சிறை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் எச்சரிக்கை

திருவண்ணாமலை, மார்ச் 18-
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களில் அனுமதியின்றி கட்சி விளம்பரம் எழுதினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனியாருக்கு சொந்தமான கட்டிடங்களில் அனுமதியின்றி கட்சி விளம்பரம் எழுதினால் ஓராண்டு சிறை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என
மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான அ.ஞானசேகரன் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.

தமிழகத்தில் மே மாதம் 16ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையட்டி

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தனியாருக்கு சொந்தமான நிலம், கட்டிடம், சுற்றுச்சுவரில் அனுமதியின்றி அரசியல் கட்சியினரோ அல்லது வேட்பாளர்களோ கொடி கம்பங்கள் நடுதல், சுவரில் தேர்தல் விளம்பரங்கள் எழுதுதல், சுவரொட்டி ஒட்டுதல், கட்அவுட்கள் வைத்தல் போன்ற பணிகளில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு அனுமதியின்றி இடம்பெற்றால் கட்டிட உரிமையாளர்கள் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு தொடரப்பட்டு நிரூபிக்கப்படுமேயானால் அதிகபட்சமாக ஓராண்டு சிறை தண்டனையோ அல்லது ரூ. 5 ஆயிரம் அபராதம் இரண்டுமே விதிக்கப்படும் மேலும் அரசு கட்டிடங்கள், சாலை குறியீட்டு பலகைகள், சாலைகளில் முக்கிய சந்திப்புகளில் உள்ள சாலை வழிகாட்டி பலகைகள், நெடுஞ்சாலைகளில் உள்ள மயில்கற்கள், மேம்பாலங்கள் இருப்புப் பாதை கடவுகள், ரயில்வே நடைபாதைகள், பேருந்து கூடுமிடங்கள் போன்ற இடங்களில் தோற்றதை சீர்குலைக்க வழக்கு தொடரப்படும். மேலும் பொதுத் துறைக்கு சொந்தமான கட்டிட சுவர்களில் எழுதப் பட்ட விளம்பரங்கள் வீடியோ படம் எடுக்கப்படும் இதையடுத்து அவற்றை மறைக்க வெள்ளை அடித்தல் போன்ற நடவடிக்கைகள் காவல்துறையின் உதவியுடன் நடைபெறும் இதற்கான செலவினங்களை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடமிருந்தும் வேட்பாளர்களிடமிருந்தும் வசூலிப்பதுடன் அதனைசம்பந்தப்பட்ட வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். இந்த நடைமுறை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம் (தனி), கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி) ஆகிய 8 தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் தனியார் கடடிடங்களில் அனுமதியின்றி கட்சி விளம்பரங்கள் எழுதினால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் அ.ஞானசேகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments