அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்காவின் வடமேற்கேயுள்ள அலாஸ்கா மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
அலாஸ்கா மாநிலத்தில் உள்ள அட்கா நகரின் தெற்கே சுமார் 45 மைல் தூரத்தில், பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் நில நடக்கம் ஏற்பப்டது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுக்கோலில் 6.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments