ஐக்கிய நாடுகள் சபை சார்பில் உலக அன்னதான நாள் அறிவிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி - உறுதிமொழி ஏற்பு
திருவண்ணாமலை, மார்ச் 4-ஐக்கிய நாடுகள் சபை சார்பில் உலக அன்னதான நாள் அறிவிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு ஆகியவை திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அக்ஷய சாயி தியான சபையில் நடைபெற்றது.
உலக அன்னதான நாள் மைய தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
கிரிவலபாதையில் உள்ள அக்ஷய ஸ்ரீ சாயி தியான சபையில் இருந்து பேரணி
புறப்பட்டது. உலக அன்னதான நாள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். வாயுலிங்கத்தில் பேரணி முடிவடைந்தது.
முன்னதாக, தியான சபை வாசலில் உணவை வீணாக்க மாட்டோம், அன்னதானம் செய்வோம் என்று மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதுகுறித்து சாயி ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது, இந்நாட்டு மக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, தனிமனித ஒழுக்கம், விருந்தோம்பல் என அனைத்து துறையிலும் இந்திய நல்நிலையில் இருந்து வந்தது.
ஆனால் இன்று உலக நாடுகளில் புதுவகையான கலாச்சாரத்தால் உணவு பழக்க வழக்கம் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு அதன் தன்மை இழந்து துரித உணவு துய்மையற்ற உணவு பொருநதாத உணவு என உலகமே உணவு முறையால் பாதிக்கப்பட்டுள்ளது.
நமது எதிர்கால சந்ததியினரின் விளைநிலங்கள், விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டிய நாம் அதை பல்வேறு கட்டிடங்களாகவும், வீட்டு மனைகளாகவும் துண்டு போட்டு விற்றவிடுவதால் எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறைக்கு நாம் தள்ளப்படுகிறோம் விவசாய நிலமின்றி. மேலும் தனிமனித ஒழுக்கமாக இருந்து வந்த உணவு பழக்கம் இன்று மற்றவர்கள் உணவை அனுதினமும் உலகெங்கும் வாழும் மக்கள் மிகப்பெரிய அளவு வீணாக்கி வருகிறது.
பசியில் வாடும் மக்கள் வாழும் நாடுகளாக கருதப்படும் சோமாலியா,
இத்தோப்பியா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் ஒரு வேளை உணவின்றி மக்கள் தவிக்கும் போது நாம் குறைந்தபட்சம் 20 சதவீத உணவை வீணாக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் மக்கள் பல நாடுகளில் உணவின்றி உள்ளனர். ஆனால் உணவு பல்வேறு விழாக்களிலும், கல்யாண வீடுகளிலும், உணவு விடுதிகளிலும் இதர வழிபாட்டு தலங்களிலும் 80 சதவீதம் உணவு வீணடிக்கப்படுகிறது. இந்த கருத்துக்கு உலகிலுள்ள காமன்வெல்த் நாடுகளிலும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, மற்றும் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும் உலக அன்னதான நாள் மலர வாழ்த்து தெரிவித்து கடிதங்கள் எழுதியுள்ளனர்.

மிக விரைவில் ஐக்கிய நாட்டு சபை ஒவ்வொரு வருடம் மார்ச் 3ந் தேதியை உலக அன்னதான நாளாக அறிவிக்க வேண்டி உலகெங்கும் உள்ள மக்கள், அவரவர் மொழியில் உறுதிமொழியினை ஏற்க உள்ளனர். இவ்வாறு சாய் ரவிச்சந்திரன் கூறினார்.
No comments
Thank you for your comments