Breaking News

அழகிரியின் சந்திப்புக்குப் பின் உற்சாகத்தில் தென்மாவட்ட திமுக!


மதுரை, மார்ச் 25-
ஏக விரக்தியிலிருந்த திமுகவினர் லேசாக நிமிர ஆரம்பித்துள்ளனர் கருணாநிதி - முக அழகிரி சந்திப்புக்குப் பிறகு. குறிப்பாக தென் மாவட்ட திமுகவினர் ஒருவித நம்பிக்கையுடன் தேர்தல் குறித்துப் பேச ஆரம்பித்துவிட்டனர்.


திமுகவின் ஏக வாரிசாக முக ஸ்டாலின் தமிழகமெங்கும் சுற்றி வந்தாலும், தேமுதிக வருமென்று இலவு காத்த கிளியாய் காத்திருந்து, பெரும் ஏமாற்றத்துக்குள்ளானதில் திமுகவின் களப்பணியாளர்கள் விரக்தி நிலைக்கே போய்விட்டனர். 

'முக அழகிரி துணை இல்லாமல் தென் மாவட்டத் தொகுதிகளை கணிசமாக வெல்ல முடியாது' என்பதுதான் நிஜ நிலைமை. முக ஸ்டாலின் அணியினருக்கு ஜீரணிக்க முடியாத நிஜம் இது. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டதும் இதனால்தான். தேமுதிகவும் இல்லாமல், வேறு பலமான கூட்டணிக் கட்சிகளும் இல்லாத சூழலில், கைவசமிருக்கும் பலமான நபரான அழகிரியை களத்தில் இறக்கினால் நிச்சயம் பலனிருக்கும் என கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், கருணாநிதியின் மகள் செல்வி உள்ளிட்டோர் வற்புறுத்தியதால்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. 

அதிலும் தேமுதிக - மநகூ இணைந்த அறிவிப்பு வந்த உடனே அழகிரியை வரச் சொன்னதே கருணாநிதிதான் என்கிறார்கள். இதனால் அழகிரியின் சந்திப்புக்குப் பின் உற்சாகத்தில் உள்ளனர் தென்மாவட்ட திமுகவினர்!

No comments

Thank you for your comments