பூவனூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்; மன்னார்குடி - மானாமதுரை ரயில் நடுவழியில் நிறுத்தம்
மன்னார்குடி, மார்ச் 9-
மன்னார்குடி, பூவனூர் அருகே காலை நேரத்தில் கடந்து சென்ற பொதுமக்கள்
சிலரால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து பதட்டமடைந்த மக்கள் உடனடியாக ரயில்வே ஊழியர்களுக்கு தகவர்
அளித்தனர்.
இதனையடுத்து விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் விரிசலை சரிசெய்யும்
பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மன்னார்குடி- மானாமதுரை ரயில் பூவனூர்
அருகேயே தடுத்து நிறுத்தப்பட்டது.
இதனால் பயணிகள் பதட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனினும், முன்னதாகவே
விரிசல் கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.ஏற்கனவே
கடந்த வருடம் செப்டம்பரில் சென்னை- மங்களூர் ரயில் ஒன்று இதே பூவனூர் அருகே
தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments