குலுக்கல் பரிசு பெற வேண்டுமா? தேர்தலில் வாக்களியுங்கள்: அதிரடி திட்டம்
கேரளா, மார்ச் 21-
கேரளாவில் மாநில அளவில் 75 சதவீத
வாக்குகள் பதிவாகும் சூழலில், மலைப்பகுதி மிகுந்த பத்தினம்திட்டா
மாவட்டத்தில் ஒவ்வொரு தேர்தலின்
போதும் 65 சதவீதத்திற்கும் குறைவாகவே
வாக்குகள் பதிவாகின்றன.
இதே போல அனைத்து மலைப்பகுதி ஓட்டுச்சாவடிகளிலும் மிக மிகக் குறைந்த அளவே வாக்குகள் பதிவாகி வருகின்றன.
இந்நிலையில், பத்தினம்திட்டாவில் இம்முறை அதிக வாக்குகள் பதிவாக தேர்தல் ஆணையம் புதிய பரிசுத் திட்டத்தை அமல்படுத்துகிறது.
மே மாதம் நடைபெறவுள்ள கேரள சட்டசபைத் தேர்தலின் போது, இம்மாவட்டத்தில்
உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பவர்களுக்கு குறிப்பிட்ட எண்கள் கொண்ட
டோக்கன் வழங்கப்படும்.
தேர்தல் முடிவடைந்ததும், ஒருநாள் குலுக்கல் நடைபெற்று அதில்
தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட
ஆட்சியாளர் அறிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments