Breaking News

அமெரிக்காவில் நடைபெறும் அணுசக்தி பாதுகாப்பு மாநாடு - பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு - பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசவும் வாய்ப்பு

டெல்லி, மார்ச் 27-
பிரதமர் திரு. நரேந்திர மோடி அடுத்தவாரம் அமெரிக்காவில் நடைபெறும் அணுசக்தி பாதுகாப்பு மாநாடு செல்லும்போது, அங்கு தலைநகர் வாஷிங்டனில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேச்சு நடத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பிரதமர் திரு. நரேந்திர மோடி, பெல்ஜியம், அமெரிக்கா, மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் வரும் 30-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அமெரிக்காவில் நடைபெறவுள்ள 4-வது அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இம்மாநாட்டிற்கு வருகை தரும் பாகிஸ்தான் பிரதமர் திரு. நவாஸ் ஷெரீப்பை அப்போது திரு. நரேந்திர மோடி சந்தித்து பேசக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அண்மையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் செல்லும் பிரதமர் திரு. நரேந்திர மோடி, அங்கு தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, அமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவில் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. 

எனினும், இம்மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான் பிரதமர் திரு. நவாஸ் ஷெரீப்பை, திரு. மோடி சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு, திரு. நரேந்திர மோடி, அடுத்த மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் சவூதி அரேபியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

No comments

Thank you for your comments