அழுக்கு சாமியார் கோவிலில் முதல்வர் தரிசனம்
புதுவை, மார்ச் 19-
தமிழகம் மற்றும் புதுவையில் சட்ட மன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தங்களது வெற்றிக்கான இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரி ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் இதுவரை தேர்தல் வேலைகள் தொடங்கப்படவில்லை. குறிப்பாக கூட்டணி அமைப்பதா? தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்தும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தேர்தலில் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் முன்பு, சேலம் அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து தனது அரசியல் பணியை செய்வது ரங்கசாமியின் வழக்கம்.
தற்போது, பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன் புதூரில் உள்ள அப்பா பைத்திய சாமியின் ஆன்மீக குருவான அழுக்கு சாமியார் கோவிலில் ரங்கசாமி நீண்ட நேரம் தரிசனம் செய்தார். பின்பு அவர் புதுச்சேரி திரும்பினார். விரைவில் தனது முடிவை அறிவிப்பார் என்று தெரிய வருகிறது.

No comments
Thank you for your comments