ஆறாவது ’கியரில்’ பறக்கும் இந்திய அணி: டோனி உற்சாகம்
இந்தியா, மார்ச் 9-
6வது
உலகக்கிண்ணப் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில்
மார்ச் 15ம் தேதி, இந்தியா தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை
சந்திக்கிறது.
இந்நிலையில் உலகக்கிண்ண டி20 தொடர் குறித்து டோனி கூறுகையில், 2011ம்
ஆண்டு உலகக்கிண்ணத் தொடரின் போது இந்திய அணி மீது எதிர்பார்ப்பு அதிகமாக
இருந்தது. தற்போதும் அதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாங்கள் இந்த தொடருக்காக சிறப்பான முறையில் தயாராகி உள்ளோம். சமீபத்தில்
நடந்த ஆசியக்கிண்ணம் உள்ளிட்ட டி20 தொடர்களில் சிறப்பாக செயல்பட்டோம்.
பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுகின்றனர். கடைசி நேர பந்துவீச்சு நல்ல நிலையில் இருப்பது நிம்மதி அளிக்கிறது.
நாங்கள் தற்போது ஆறாவது கியரில் சென்று கொண்டிருக்கிறோம். சில
வாகனங்களில் எட்டாவது கியர் கூட வந்துவிட்டது. அணி நன்று அமைந்து விட்டதால்
கூடுதல் கியர் தேவையில்லை.
டி20 உலகக்கிண்ணப் போட்டிகள் உலகத்தரமான தொடர் என்பதால் மிகவும் சவாலாக இருக்கப் போகிறது.
இதில் எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. இப்போதே இறுதிப்
போட்டியை பற்றி நினைக்க முடியாது. படிப்படியாக தான் முன்னேற வேண்டும்“
என்று கூறியுள்ளார்.
No comments
Thank you for your comments