Breaking News

சர்வதேச டி20 போட்டியில் 44 வயதில் அறிமுகமான ரையான் கேம்ப்பெல்!

ஆஸ்திரேலியா, மார்ச் 9-
டி20 உலகக்கிண்ண தகுதிச்சுற்றில் ஹாங்காங் அணியில் ரையான் கேம்ப்பெல் நேற்றையப் போட்டியில் களமிறங்கினார்.

அவருக்கு வயது 44 ஆண்டு 30 நாட்கள். இதன் மூலம் அதிக வயதில் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதற்கு முன்பு ஐக்கிய அரபு அமீரக வீரர் முகமது தாகிர் 43 வயது 176 நாட்களில் தனது முதல் டி20 போட்டியில் களமிறங்கினார்.


ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேம்ப்பெல், அவுஸ்திரேலிய அணிக்காக 2002ம் ஆண்டு இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி 38, 16 ஓட்டங்கள் வீதம் எடுத்தார்.

ஆனால் அதன் பிறகு அவருக்கு ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரது பாட்டி சீனாவைச் சேர்ந்தவர்.

இதனால் 2012ம் ஆண்டு குடும்பத்துடன் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்குக்கு இடம் பெயர்ந்தார்.

அங்கு உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடியதன் மூலம், ஹாங்காங் அணியிலும் இடம் பிடித்து விட்டார்.

நேற்று நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ரையான் கேம்ப்பெல் 19 பந்துகளை சந்தித்து 9 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments