தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைர் துவக்கி வைத்தார்
வேலூர், மார்ச் 17-
வேலூர் மாவட்டம் ஆற்காடு பேருந்து
நிலையத்தில் மகளிர் திட்டத்தின் மூலம்
அமைக்கப்பட்ட தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்
என்று கையெழுத்து இயக்கத்தையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர் கையெழுத்துயிட்டு தொடங்கிவைத்தார். பின்னர்
நாட்டுபுற கலைநிகழ்ச்சிகளின் மூலம் தேர்தலில் அனைவரும்
பங்கேற்று தங்களுடைய ஜனநாயக கடைமையை நிறைவேற்ற
வேண்டும்
என்று பொது மக்கள்
மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு பிரசாரத்தையும், பின்னர் பேருந்துகளில் பயணம்
செய்யும் பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி
அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல்
அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.நந்தகோபால்,
கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில்
இராணிப்பேட்டை கோட்டாட்சியர் முருகேஷன், மகளிர் திட்ட அலுவலர் லோகநாயகி,
புதுவாழ்வு திட்டமேலாளர் சம்பத்குமார், ஆற்காடு
தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராசு, ஆற்காடு வட்டாட்சியர் சாந்தி, செய்தி மக்கள்
தொடர்பு அலுவலர் விஜயகுமார் மற்றும்
பலர் கலந்து கொண்டனர்
No comments
Thank you for your comments