Breaking News

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 20 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கம்

திருவண்ணாமலை, : 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 20 ஆயிரத்து 122 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 2016ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கடந்த மாதம் 20ந தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் லட்சக்கணக்கான போலி வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின.
மேலும் இறந்தவர்கள் இடம் பெயர்ந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து  நீக்கப்படாத விவரங்களை உரிய ஆவணங்களுடன் தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து சிறப்பு கிராம சபா கூட்டம், வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் போன்றவை நடத்தப்பட்டது. அதில் போலி வாக்காளர்களின் பெயர்களை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. 
அதனடிப்படையில் பெயர்நீக்கம் செய்யப்பட்டவர்களின் விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற  தொகுதிகளில் இறந்தவர்கள் 13 ஆயிரத்து 590, இடம் பெயர்ந்தோர் 385, இரு இடங்களில் பெயரிடம் பெற்றோர் 6,105 உள்பட மொத்தம் 20 ஆயிரத்து 112 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதில் சட்டமன்ற தொகுதி வாரியாக திருவண்ணாமலை 4504, செங்கம் (தனி) 1500, கீழ்பென்னாத்தூர் 2360, கலசபாக்கம் 2358, போளூர் 1716, ஆரணி 4142, செய்யாறு 2464, வந்தவாசி (தனி) 1078 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதன் முழுமையான பெயர் முகவரி உள்ளிட்ட விவரங்கள் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments