தற்கொலை செய்யவிருந்த 70,000 பேரின் மனதை மாற்றி காப்பாற்றிய முன்னாள் ஐஐடி மாணவி
டெல்லி, மார்ச் 17-
ஐஐடி கவுஹாத்தியில் படித்த ரிச்சா சிங் தற்கொலை செய்யத் துடித்த 70 ஆயிரம் பேரை காப்பாற்றியுள்ளார்.
உலகிலேயே மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் இந்தியர்களும்
அடக்கம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில்
வசிப்போரில் 36 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கு ஒரு இந்தியர் தற்கொலை
செய்து கொள்கிறார். அதிலும் இளைய தலைமுறையினர் தான் அதிக அளவில் தற்கொலை
செய்கிறார்கள். இதை பார்த்த ஐஐடி கவுஹாத்தியில் படித்த ரிச்சா சிங் தற்கொலை
செய்வோரை காப்பாற்ற www.yourdost.com என்ற இணையதளத்தை துவங்கியுள்ளார்.
மன அழுத்தத்தால் தற்கொலை செய்ய முடிவு செய்வோர் இந்த இணையதளம் மற்றும்
YourDOST(யுவர்தோஸ்த்) செல்போன் ஆப் மூலம் நிபுணர்களிடம் தங்களின்
பிரச்சனையை தெரிவித்து நம்பிக்கை பெறலாம். இதன் மூலம் தற்கொலை செய்யவிருந்த
70 ஆயிரம் பேரின் மனதை மாற்றியுள்ளார் ரிச்சா.
இது குறித்து ரிச்சா கூறுகையில்,
அனைவருக்கும் பிரச்சனை உள்ளது. அனைவரின் வாழ்க்கையிலும் எப்போதாவது மன
அழுத்தம் ஏற்படும். ஆனால் அதை நாம் வெளியே கூறுவது இல்லை. வெளியே சொன்னால்
நம்மை பற்றி பிறர் என்ன நினைப்பார்கள் என்ற பயம்.
மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும்
நிபுணர்கள் மூலம் உதவி செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.
No comments
Thank you for your comments