Breaking News

டெல்லி, மும்பை உள்பட 5 நகரங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்: உஷார் நிலையில் போலீஸ்

டெல்லி, மார்ச் 7-
5 major cities on terror radar-IB issues alertடெல்லி, மும்பை, ஜெய்பூர், லக்னோ, சன்டிகர் ஆகிய 5 நகரங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி, மும்பை, ஜெய்பூர், லக்னோ, சன்டிகர் ஆகிய 5 நகரங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த 5 மாநில போலீசாரையும் விழிப்புடன் இருக்குமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து உளவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

டெல்லி, மும்பை, ஜெய்பூர், லக்னோ, சன்டிகர் ஆகிய 5 நகரங்களை சில தீவிரவாத அமைப்புகள் தாக்க முயற்சிக்கக்கூடும் என்று நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது என்றார்.

குஜராத்திற்குள் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த 10 தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாகவும், அவர்கள் சிவராத்திரி கொண்டாட்டத்தின்போது தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நசீர் கான் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலிடம் தெரிவித்தார்.

இதையடுத்து குஜராத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு படையினர் குஜராத் வந்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர் அதிகாரிகளை இன்று சந்தித்து குஜராத் நிலவரம் பற்றி ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் டெல்லியிலும் சில தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதையடுத்து அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments