திருச்சி அருகே வேன் மரத்தில் மோதி 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி- நாகூர் தர்கா சென்றவர்கள்
திருச்சி மாவட்டம் முசிறியில் வேன் ஒன்று
விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக பலியாகிய சம்பவம் பரபரப்பினை
ஏற்படுத்தியுள்ளது.
சேலத்திலிருந்து 4 வேன்களில் நாகூர் தர்காவிற்கு உறவினர்கள் மற்றும்
நண்பர்கள் இணைந்து சென்று கொண்டிருந்தனர். திருச்சி, முசிறி மஞ்சைக்கோரை
அருகே வேன்கள் வந்தபோது ஒரு வேன் மட்டும் நிலைதடுமாறி ரோட்டின் ஓரத்தில்
இருந்த மரத்தின் மீது மோதியது.
இதில் அந்த வேனில் பயணித்த 4 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே
பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள
போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்
செல்லப்படும் எனத் தெரிகின்றது. இச்சம்பவத்தால் மற்ற வேன்களில் பயணித்த
உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
No comments
Thank you for your comments