Breaking News

ரேஷன்கடையில் வேலைவாங்கி தருவதாக வேலை வாங்கித் தருவதாக கூறி இளைஞரிடம் ரூ. 2 லட்சம் மோசடி பெண் ஊழியர் தலைமறைவு

திருவண்ணாமலை, மார்ச் 19-
திருவண்ணாமலை அருகே ரேஷன்கடையில் வேலைவாங்கி தருவதாக வேலை வாங்கித் தருவதாக கூறி இளைஞரிடம் ரூ. 2 லட்சம் மோசடி பெண் ஊழியர் தலைமறைவு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் சரவணன் (27), தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த சகாதேவன் மகள் சசிகலா (35) ரேஷன் கடை ஊழியர். இவர் சரவணனிடம் ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2014ஆம் ஆண்டு ரூ. 2.75 லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வேலைவாங்கி தரவில்லை.

பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுபற்றி சரவணன் பலமுறை
கேட்டபோது பணம் திருப்பிக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுதது கடந்த ஆண்டு மே மாதம் சரவணன் வந்தவாசி நகர வடக்கு
காவல்நிலையத்தில் புகார் செய்தார். அப்போது இன்ஸ்பெக்டர் வெங்கடேசன்
இருதரப்பையும் அழைத்து விசாரணை மேற்கொண்டதில் மே மாதம் 2ந் தேதி ரூ. 70 அயிரத்தை சசிகலா, சரவணனிடம் ஒப்படைத்து மீதமுள்ள தொகை ரூ. 2.5 லட்சத்தை தவணை முறையில் தருவதாக ஒப்புக் கொண்டாராம். ஆனால் அந்த பணத்தை இதுவரை தராமல் சசிகலா காலம் கடத்தி வந்துள்ளார்.

இதுகுறித்து சரவணன், சசிகலாவிடம் கேட்டதற்கு அவர் ஆபாசமாக பேசியதோடு உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள் என மிரட்டியுள்ளார். இந்நிலையில் தன்னை கைது செய்யக்கூடாது என்று கூறி திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சசிகலா முன்ஜாமீன் கோரியதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து சரவணன் கடந்த 7ந் தேதி வந்தவாசி நகர காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் சசிகலாவை விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் விசாரணைக்கு சசிகலா வராமல் தி.மலை குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரினார். இதையடுத்து வந்தவாசி நகர வடக்கு காவல்நிலைய சப்இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி நேற்றுவழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரேஷன் கடை பெண் ஊழியர் சசிகலாவை வலைவீசி
தேடிவருகின்றனர்.

No comments

Thank you for your comments