Breaking News

தேர்தலில் தவறான தகவல்களை அளிக்கும் வேட்பாளர்களுக்கு 2 ஆண்டு சிறை: நஜிம் ஜைதி தகவல்


தேர்தல் வேட்பு மனுக்களில் தவறான தகவல்களை அளிக்கும் வேட்பாளர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் திரு. நஜிம் ஜைதி தெரிவித்துள்ளார். 
ஆந்திர மாநிலம் ஐதரபாத்தில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து தேசிய கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற தலைமை தேர்தல் ஆணையர் திரு. நஜிம் ஜைதி பங்கேற்று பேசினார். வேட்புமனுக்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை அளித்தால், அது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு, வேட்பாளர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும், இத்திட்டம் மத்திய சட்ட அமைச்சகத்தில் பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள கிரிமினல் வழக்குகளை மறைத்தாலோ அல்லது முழுவிவரங்களை வெளியிடவில்லை என்றலோ, அது தவறான தகவல்களாக கருதப்படும் என அவர் குறிப்பிட்டார். மேலும், வெளிநாட்டு நிதியை தேர்தல் நிதி அமைப்புகள் பெறுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் திரு. நஜிம் ஜைதி தெரிவித்தார்.

No comments

Thank you for your comments