Breaking News

கூட்டணி அமையாவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி - தமிழிசை சௌந்தரராஜன்

நெய்வேலி,  மார்ச் 07:
இந்த தேர்தலில் கூட்டணி சிறப்பாக அமையாவிட்டால், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட பாஜக வலுவான நிலையில் தயாராக உள்ளது என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இது குறித்து நெய்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “தேர்தல் மேலிட பார்வையாளரான மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்
ஏற்கனவே எங்கள் கட்சி கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் பேசி வருகிறார்.

இந்த தேர்தலில் கூட்டணி சிறப்பாக அமையவிட்டால், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட பாஜக வலுவான நிலையில் தயாராக உள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே 2 கூட்டணி அமைந்துள்ளது. இதில் மக்கள் நலக் கூட்டணியால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப்போவதில்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஏற்கனவே நிராகரித்து உள்ளனர்.

பாஜக தலைமையில் அமைய உள்ள கூட்டணி வளமான தமிழகத்தையும், ஊழலற்ற ஆட்சியையும் கொடுக்கும். தமிழக அரசு தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதை கருத்தில் கொண்டு அவசர அவசரமாக பல அறிவிப்புகளை வெளியிட்டது.

அதில். மதுவிலக்கு குறித்த அறிவிப்பும் வரும் என எதிர்பார்த்தோம். அந்த அறிவிப்பு வராதது பாஜகவிற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி ஆகியோர் மீது பல ஊழல் வழக்குகள் பல உள்ளன. பா.ஜ.க. கட்சி ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற ஆட்சியை அமைப்போம்.


No comments

Thank you for your comments