கும்பகோணத்தில் பிளஸ் 1 மாணவன் மர்மமான முறையில் வீட்டிலேயே கொலை செய்து நகைகளை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
சுவாமிமலை, மார்ச் 11-கும்பகோணம் புறநகர் பகுதியான மேலக்காவோரி ஜாமியா நகர் 12வது குறுக்குத் தெருவை சோர்ந்த சம்சுதீன் துபாயில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு பாரக்அலி என்பவாரின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகனான அப்துல்ஹமீது வயது 15, கும்பகோணத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து
வருகிறான். நேற்று அவன் பள்ளிக்கு செல்லாமல் அவனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. சிறிதுநேரத்தில் அப்துல்ஹமீதை காணவில்லை. இந்த நிலையில் அவனுடைய நண்பர்கள் அப்துல் ஹமீதை தேடி வீட்டிற்கு செல்லும்பொழுது அவன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இருந்ததை அறிந்து அக்கம் பக்கம் இருந்தவர்களுக்கு தகவல் தொரிவித்தனர்.
தனது தந்தை வெளிநாட்டில் வேலை செய்ய தாய்க்கும் தந்தைக்கும் விவாகரத்து நடைபெற்று தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் தனது உறவினர் பாதுகாப்பில் அப்துல் ஹமீது வளர்ந்து வருகிறான்.
இந்த தகவலை அறிந்து சுவாமிமலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். இதனால் கும்பகோணம் பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments