Breaking News

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு: 14 பேர் காயம்

ஆப்கானிஸ்தான், மார்ச் 2:
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. 

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள ஜலாலாபாத்தில் இருக்கும் இந்திய தூதரகம் அருகே இன்று குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இதில், குறைந்தது இரண்டு குண்டுகள் வெடிக்கும்
சப்தம் கேட்டதோடு, மேலும் சிலர் துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் தூதரக கதவுகள், ஜன்னல்கள் சேதம் அடைந்துள்ளன. 14 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் 4 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரை சுட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. 

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில், ஜலாலாபாத்தில் உள்ள நம் தூதரகத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்த அனைவரும் பத்திரமாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments